Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சீன மக்கள் மண்டபத்தில் இன்று(15) இடம்பெற்றுள்ளது.
சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று(14) சீனாவை சென்றடைந்தார்.
இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.