Colombo (News 1st) சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அந்நாட்டின் ஜனாதிபதி ஸீ ஜிங் பிங்கை இன்று(15) சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதியை வரவேற்பதற்கான உத்தியோகபூர்வ வைபவமும் பீஜிங் நகரில் இன்று(15) நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி சீனாவை நேற்று(14) சென்றடைந்தார்.
சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட சில துறைசார் கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதோடு பல உயர்மட்ட வர்த்தக கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கு இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.