வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் அறிவிப்பு

வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிப்பு

by Staff Writer 11-01-2025 | 10:34 PM

Colombo (News 1st) எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கான இறக்குமதி வரி வீதம் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உற்பத்தி திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு மேற்படாத வாகனங்களுக்கு 200 இலிருந்து 300 வீதம் வரை வரி விதிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒருசில வாகனங்களின் எஞ்சின் கொள்ளளவிற்கு அமைய வரி விதிக்கப்பட்டுள்ளது.