Colombo (News 1st) பசறை 10ஆம் கட்டைப் பகுதியில் விபத்திற்குள்ளான பஸ்ஸை குறித்த பஸ்ஸின் நடத்துனரே செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் நடத்துனருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த பஸ் இன்று(11) காலை 6 மணியளவில் பசறை 10ஆம் கட்டைப் பகுதியில் விபத்திற்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
பசறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோரில் 7 வயதான சிறுவனும் அவரின் தாயாரும் அடங்குகின்றனர்.
பஸ் விபத்திற்குதகுள்ளான சந்தர்ப்பத்தில் பஸ் நடத்துனரே பஸ்ஸை செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.