கிழக்கு முனைய நிர்மாணப்பணியை துரிதப்படுத்த திட்டம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 10-01-2025 | 2:42 PM

Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.

இதனிடையே, அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் மேற்கு முனைய அபிவிருத்தி பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.

இந்த இருமுனையங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் கொழும்பு துறைமுகத்தின் வருடாந்த கொள்கலன் நடவடிக்கை கொள்ளளவு 8 மில்லியனிலிருந்து 13 மில்லியனாக அதிகரிக்குமென துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு குறிப்பிட்டார்.

இது நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் சர்வதேச சந்தைக்கும் வலுவான பிரவேசமாக அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்.