இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர்

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம திசாநாயக்க நியமனம்

by Staff Writer 10-01-2025 | 7:14 PM

Colombo (News 1st) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(10) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய W.K.D.விஜேரத்ன கடந்த ஆண்டு ஒக்டோபரில் பதவி விலகினார்.

இதனையடுத்து குறித்த பதவிக்கான கடமைகளை ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் M.R.Y.K.உடவெல முன்னெடுத்திருந்தார்.