சிறைச்சாலை அதிகாரி பதவிக்கு 1800 வெற்றிடங்கள்

சிறைச்சாலை அதிகாரி பதவிக்கு 1800 வெற்றிடங்கள் - சிறைச்சாலைகள் திணைக்களம்

by Staff Writer 06-01-2025 | 12:01 PM

Colombo (News 1st) சிறைச்சாலை அதிகாரி பதவிக்கு 1800 வெற்றிடங்கள் காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் சோதனை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கைதிகளைப் சோதனைக்குட்படுத்துவதற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க கூறினார்.

தற்போது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் சாதாரண எண்ணிக்கை 300 வீதமாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.