ரயில் ஆசன முன்பதிவு தொடர்பான அறிவிப்பு

ரயில் ஆசன முன்பதிவு தொடர்பான அறிவிப்பு

by Staff Writer 31-12-2024 | 6:10 PM

Colombo (News 1st) ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும்போது பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளடக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசனங்களை முன்பதிவு செய்தவர்கள் ரயில் நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது ரயிலில் பயணச்சீட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை பரிசோதித்து உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான பயணச்சீட்டுக்கு உரிய கட்டணத்தை மீளப் பெறும்போது அதன் உரிமையாளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் பிரதியை ரயில் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.