கோழி மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாது

பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாது - அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்

by Staff Writer 23-12-2024 | 3:05 PM

Colombo (News 1st) பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்படாதென அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போதுமான கையிருப்பின் ஊடாக தேவைக்கேற்ப சந்தை விநியோகம் இடம்பெறுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கிலோகிராம் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியை 1000 ரூபாவுக்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியுமென அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறியுள்ளார்.

முட்டையொன்றின் விலை 31 ரூபா முதல் 33 ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.