கல்வி அமைச்சின் அறிவித்தல்

பாடசாலை உபகரண கொள்வனவிற்கான மானியத் திட்டம் அஸ்வெசும பெறும் குடும்பங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை - கல்வி அமைச்சு

by Staff Writer 19-12-2024 | 2:54 PM

Colombo (News 1st) பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம், அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாத எனினும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ள   சிறுவர்களுக்காகவும் குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.

நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக 55 வீத பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அண்மையில் பிரதமர் ஹரினி அமரசூரிய கருத்து தெரிவித்திருந்தார்.