கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை

by Staff Writer 19-12-2024 | 5:15 PM

Colombo (News 1st) நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று(19) பிடியாணை பிறப்பித்தார்.

தமது சேவைபெறுநர் சுகவீனம் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மதத்தை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்தது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த மேலதிக நீதவான், பிரதிவாதிக்கு பிடியாணை பிறப்பித்து வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.