Colombo (News 1st) மீகொட - நாகஹவத்த பகுதியில் காரில் பயணித்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது சகோதரர் வீட்டில் நேற்றிரவு(14) நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு மனைவி மற்றும் பிள்ளையுடன் வீடு திரும்பும் போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுப்பகுதியில் மறைந்திருந்த இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களின் ஆளடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சமுர்த்தி பிரதான அலுவலகத்தில் அலுவலகப்பிரிவு உதவி உத்தியோகத்தராக சேவையாற்றிய 32 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.