Colombo (News 1st) மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்காக மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் எரிபொருளுக்கான விலை விபரங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தங்களின் கோரிக்கைக்கு அமைவாக கிடைக்கப் பெற்றுள்ள குறித்த அறிக்கைக்கமைய மின் கட்டணத் திருத்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விரிவான ஆய்வறிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி பொதுமக்களுக்கு வௌியிடப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மக்கள் கருத்துக்களை அறிந்துக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் 21 நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.