Colombo (News 1st) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நீதிமன்றில் இன்று(14) நடைபெற்ற வழக்கு விசாரணையில் நபர் ஒருவருக்கு பிணை பெற்றுக்கொள்ள வந்திருந்த பெண்ணொருவரே காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.