WhatsApp ஊடுருவல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

WhatsApp ஊடுருவல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரிப்பு

by Staff Writer 02-12-2024 | 2:29 PM

Colombo (News 1st) வாட்ஸ்அப் ஊடுருவல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் சுமார் 74 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.

தெரிந்த ஒருவரின் இலக்கத்தினூடாக அல்லது தெரியாத இலக்கத்திலிருந்து மேற்கொள்ளப்படும் அழைப்பினூடாக அல்லது ஒன்லைன் கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு வரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளினூடாக இந்த ஊடுருவல் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய அழைப்புக்களினூடாக, வாட்ஸ் அப் குறுஞ்செய்தியினூடாக கோரப்படும் குறியீட்டு இலக்கங்களை (OTP) வழங்க வேண்டாமென இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்  பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு வாட்ஸ் அப் ஊடுருவப்பட்டால் உடனடியாக வாட்ஸ் அப் கணக்கை அழித்துவிட்டு மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் இந்த சிக்கலை விரைவில் நிவர்த்திக்க முடியுமெனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.