மலையக மார்க்க ரயில் சேவை வழமைக்கு திரும்பியது...

மலையக மார்க்க ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது...

by Staff Writer 02-12-2024 | 2:29 PM

Colombo (News 1st) ஹாலிஎல - உடுவர பகுதியில் மண்மேடு சரிந்தமையால் தடைப்பட்டிருந்த மலையக மார்க்க ரயில் போக்குவரத்து இன்று(02) முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.

மலையகத்திற்கான ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல - உடுவர பகுதியில் அண்மையில் மண்சரிவு ஏற்பட்டது.

குறித்த ரயில் மார்க்கத்தில் சரிந்து வீழ்ந்த மண்மேடு நேற்று முற்றாக அகற்றப்பட்டது.

இன்று காலை முதல் குறித்த ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.