Colombo (News 1st) மின் கட்டணத் திருத்த யோசனையை எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கான தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் A.D.K.பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக 6 முதல் 11 வீதம் வரையான மின் கட்டண குறைப்பு யோசனையை இலங்கை மின்சார சபை இதற்கு முன்னர் சமர்ப்பித்திருந்தது.
அதனை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2025ஆம் ஆண்டு முதல் 6 மாதங்கள் தொடர்பில் ஆராய்ந்து கட்டணத் திருத்த முன்மொழிவை மறுசீரமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.