Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பீ.சூரியபண்டார தெரிவித்தார்.
சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை விரைவாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.