Colombo (News 1st) சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டு சவால்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக சக்தி - சிரச நிவாரண யாத்திரை இன்று(01) முதல் ஆரம்பம்.
நிவாரண யாத்திரைக்காக அரிசி, பருப்பு, சீனி, கோதுமை மா, நூடுல்ஸ், தேயிலை மற்றும் சோயா மீட் ஆகிய பொருட்களை நீங்கள் கையளிக்க முடியும்.
நிவாரண பொருட்களை கையளிப்பதற்காக 5 விசேட மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய
1.கொழும்பு 02 பிறேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள சக்தி, சிரச பிரதான தலைமை காரியாலயம்,
2.கொழும்பு 04, பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் வஜிர பிள்ளையார் கோவில்,
3.தெஹிவளை ஶ்ரீ வெங்கடேஸ்வரர் மகாவிஷ்ணு கோவில்,
4.கொழும்பு புதுச்செட்டித்தெரு சாய் சேவா மத்திய நிலையம்,
5.கொழும்பு 12 ஜூம்மா பெரிய பள்ளிவாசலுக்கு
நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை கையளிக்க முடியும்.
0777 6000 40 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு சக்தி - சிரச நிவாரண யாத்திரை தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.