பெரிய வெங்காயத்திற்கான வர்த்தக வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான வர்த்தக வரி குறைப்பு

by Staff Writer 01-12-2024 | 8:35 PM

Colombo (News 1st) இறக்குமதி  செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான வர்த்தக வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கான 30 ரூபா வர்த்தக வரியை 10 ரூபா வரை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கவும் நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதிசெய்யவும் குறுகிய கால நடவடிக்கையாக இதனை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் வரி குறைப்பானது எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும்  எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் கொள்கை முடிவுகளின் பிரகாரம் சட்ட நடைமுறையின் கீழ் அதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோவிற்கு 60 ரூபா என்ற விசேட வர்த்தக வரியில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென அமைச்சு கூறியது.