Colombo (News 1st) இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் வானிலை அறிக்கைகளுக்கு அமைவாக உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 03ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, டிசம்பர் 04ஆம் திகதி முதல் பரீட்சைகள் மீள ஆரம்பிக்கப்படும்.
நவம்பர் 27ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 21ஆம் திகதியும்
நவம்பர் 28ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 23ஆம் திகதியும்
நவம்பர் 29 இற்குரிய பரீட்சை டிசம்பர் மாதம் 27ஆம் திகதியும்
நவம்பர் 30ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 28ஆம் திகதியும்
டிசம்பர் 2ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 30ஆம் திகதியும்
டிசம்பர் 3ஆம் திகதிக்குரிய பரீட்சை டிசம்பர் 31ஆம் திகதியும் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.
பிரதமர், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகளுக்குரிய புதிய நேர அட்டவணை டிசம்பர் மாதம் 7ஆம் திகதியளவில் அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று(27), இன்று(28) மற்றும் நாளைய தினங்களில்(29) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நடத்தப்படும் என பரீட்சை திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.