Colombo (News 1st) பலத்த மழை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தமக்கு வழங்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் தவிர்ந்த வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதாயின் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்.
அனர்த்த நிலைமைகளின் கீழ் மாத்திரம் இதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அனர்த்த நிலைமைகளால் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று(25) காலை ஆரம்பமான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சையில் 333,185 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.