Colombo (News 1st) பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 7 பேர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் பறித்துக்கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று(23) மாலை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த 7 பேரில் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.