எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போகும் ரஷ்யா

ஆஸ்திரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக தெரிவித்த ரஷ்யா

by Staff Writer 16-11-2024 | 5:15 PM

Colombo (News 1st) ஆஸ்திரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

யுக்ரைன் ஊடாக ஐரோப்பாவுக்கான பழமையான எரிவாயு ஏற்றுமதி பாதை இந்த வருட இறுதியில் மூடப்படவுள்ள நிலையில் ரஷ்யா ஆஸ்திரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தவுள்ளது.

ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான Gazprom நிறுவனத்துடனான விநியோக ஒப்பந்தத்தை நீடிக்க யுக்ரைன் மறுத்ததால் யுக்ரைன் ஊடான ஏற்றுமதிப் பாதை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்யா மீளவும் வலுசக்தியை ஆயுதமாக பயன்படுத்துவதாக யுக்ரேன் வௌிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆஸ்திரியா ஏதேனுமொரு வழியைக் கண்டுபிடிக்குமென அவர் உறுதியளித்துள்ளார்.