Colombo (News 1st) சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபாலவின் பெயரைப் பயன்படுத்தி Eazy Case ஊடாக வைத்தியர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபாலவின் பெயரைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்பின் ஊடாக வைத்தியர்கள் சிலரிடம் இருந்து சந்தேகநபர்கள் பணம் பெற்றுள்ளனர்.
தற்போது வௌியாகியுள்ள தகவல்களுக்கு அமைய இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர்கள் சிலரிடம் இருந்தும் குறித்த சந்தேகநபர்கள் பணம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், 40 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து பொதுமன்னிப்பு பெற்ற ஒருவராவார்.