Colombo (News 1st) ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளத்தை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 80,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்பட்டதாக அமைச்சின் செயலாளர் என்.பி.என்.எம்.விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவிலான சோளம் பயிரிடப்படுகிறது.
நாட்டின் நுகர்விற்கு போதுமான அளவு சோளம் உற்பத்தி செய்யப்படாமையால் 3 இலட்சம் மெட்ரிக் டொன் சோளத்தை நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை நாட்டிற்கு 150,000 மெட்ரிக் தொன் சோளம் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய தொகை சோளத்தை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சினால் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.