பன்முகத்தன்மை மற்றும் ஒன்றிணைவிற்கான ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் விருது MTV தனியார் நிறுவனம் வசமானது

by Staff Writer 20-10-2024 | 7:58 PM

Colombo (News 1st) 2024 பன்முகத்தன்மை மற்றும் ஒன்றிணைவிற்கான ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் விருதை கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் MTV செனல் தனியார் நிறுவனம் இன்று(20) தனதாக்கியது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவிலேயே கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் MTV செனல் தனியார் நிறுவனம் இந்த விருதுக்கு பாத்திரமானது.

பன்முகத்தன்மை மற்றும் ஒன்றிணைவிற்கான ஊடக செயற்பாட்டிற்காகவே இந்த விருது வழங்கப்பட்டது.

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் சார்பில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் நிகழ்வில் கலந்துகொண்டு விருதைப் பெற்றுக்கொண்டார்.

MTV ஊடக நிறுவனத்தற்குள் பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை பேணப்பட்டமை, சம சந்தர்ப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை என்பன இந்த விருது வழங்கலின் போது பாராட்டுதலுக்கு உரித்தானது.

ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்கள் சங்கத்தின் 61ஆவது பொது மாநாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பு ஒன்றியத்தின் இந்த மதிப்புமிக்க விருது, ஊடகத்துறையில் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது.