பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம்

by Staff Writer 18-10-2024 | 10:55 AM

Colombo (News 1st) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இரசாயன விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியரான அவர், களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார்.

1997ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வெய்ன் அரச பல்கலைக்கழகத்தில் (Wayne State University) கலாநிதி பட்டம் பெற்ற அவர், உணவுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள், இரசாயனம் மற்றும் போசாக்கு தொடர்பான பல்வேறு ஆய்வுகளை வழிநடத்தியுள்ள பிரதான விரிவுரையாளராக காணப்படுகின்றார்.