Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தின் சேனாகம பிரதேச மக்களுக்காக கம்மெத்தவால் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு திட்டம் இன்று(16) கையளிக்கப்பட்டது.
மாத்தளை நிர்வாக மாவட்டத்திற்குள் அடங்கும் ஒரு கிராமமே சேனாகம.
நாவுல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வாழ்கின்றன.
இந்த மக்கனிக் நீண்ட கால குடிநீர் பிரச்சினை கம்மெத்தவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, குடிநீர் சுத்திகரிப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சன்ஷயின் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சமூக பராமரிப்பு பிரிவான SUNSHINE FOUNDATION FOR GOOD இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்குகின்றது.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் பிரதி நிதி முகாமையாளர் யாதவன் மஹிந்தன், செய்தி முகாமையாளர் ஒமாயா கோவிலகொடகே, ஆகியோரும் கம்மெத்த குழுவினருடன் இணைந்திருந்தனர்.