Colombo (News 1st) கம்பஹா, களனி கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் அனர்த்த நிலைமையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ, கடுவளைை கோட்டக்கல்வி பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகளையும் எதிர்வரும் 2 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், கொழும்பு கல்வி வலயத்தில் தேசிய பாடசாலைகள் உள்ளடங்களாக அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம்(14) மாத்திரம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர கூறினார்.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலவும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் தேவையேற்படின் பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.