நீர்க்கட்டணங்களை செலுத்தாத அமைச்சர்கள்

உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை செலுத்தாத அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்

by Staff Writer 13-10-2024 | 12:16 PM

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அறவிடப்படாது நிலுவையில் உள்ள தொகை 9 மில்லியன் ரூபாவாகும்.

பொதுவிதிகளுக்கு அமைய குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.