Colombo (News 1st)ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 40 தொகுதி அமைப்பாளர்களை இம்முறை பொதுத் தேர்தலில் களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரசாரச் செயலாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக கட்சியின் உப தவிசாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்த கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பிரசாரச் செயலாளர் திசர குணசிங்க குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் இளம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை அளித்து அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.