இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம்

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம்

by Chandrasekaram Chandravadani 30-09-2024 | 9:32 PM

Colombo (News 1st) இன்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

92 ஒக்டேன் ரக பெட்ரோலின் விலை 21 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 311 ரூபா)

ஒட்டோ டீசலின் விலை 24 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 283 ரூபா)

சுப்பர் டீசலின் விலை 33 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 319 ரூபா)

மண்ணெண்ணெய் விலை 19 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 183 ரூபா)

95 ஒக்டேன் ரக பெட்ரோல் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை (விலை 377ரூபா) என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.