தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் 3 வினாக்களை நீக்க யோசனை

by Staff Writer 17-09-2024 | 11:07 PM

Colombo (News1st) இம்முறை நடைபெற்ற  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளில் 3 வினாக்களை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கிடையில் இன்று(17) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் பகுதி  வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

செய்தித் தொகுப்பு