Colombo (News1st) உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் 30 வீதம் வரை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை(08) ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகளைப் பகிர்ந்தளிப்பதற்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க கூறினார்.
இதற்கமைய நாளை காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கே சென்று பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.