Colombo (News 1st) சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று(29) வௌியிடப்பட்டது.
'இயலும் ஸ்ரீ லங்கா' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டுசெல்லும் திட்டங்களும் குறித்த கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொள்கைப் பிரகடனம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக www.ranil2024.lk எனும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2022 நெருக்கடிக்கு பின்னர் சரியான பாதையில் செல்வதாகவும் இந்த பயணத்தின் அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் தன்னிடம் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார்.