Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிற்கு எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்காக 3 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் 7 பேர் இன்று(14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
அவர் எக்சத் லங்கா பொதுஜன கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(14) கட்டுப்பணம் செலுத்தினார்.
இதேவேளை, கட்டுப்பணம் செலுத்தியதன் பின்னர் இராஜகிரியவிலுள்ள எக்சத் தலங்கா பொதுஜன கட்சி அலுவலகத்திற்கு சென்று ஏற்கனவே இணக்கம் தெரிவித்த 3 கோடி ரூபாவை வழங்குவதற்கு தயாரானபோது கட்சியின் செயலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.