Colombo (News 1st) நீர் கட்டணத்தை 5.94 வீதத்தால் குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு இணையாக நீர்கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வீட்டுப்பாவனை பிரிவிற்கான நீர் கட்டணம் 7 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது.
பாடசாலை மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான நீர் கட்டணம் 6.3 வீதத்தாலும் அரச வைத்தியசாலைகளுக்கான நீர் கட்டணம் 4.5 வீதத்தாலும் குறைக்கப்படவுள்ளன.