பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்தும் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை கட்சியின் பொதுச்செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோவுக்கு உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை உடனடியாக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மனுஷ நாணயக்காரவினால் வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காலி மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்திலுள்ள பந்துல லால் பண்டாரிகொடவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹரின் பெர்னாண்டோவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தேசியப்பட்டியல் சபை உறுப்பினர் பதவிக்கு பொருத்தமானவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளாu;.