நாட்டில் மண்சரிவு அபாயமுள்ள 35 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த 35 இடங்களிலும் மண்சரிவு அனர்த்தங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.