Colombo (News 1st) கொழும்பு - வோட் பிளேஸ் பிரதேசத்திலுள்ள தேசிய பல் வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று(23) அதிகாலை 1 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கரவின்ன கொடகவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி வாடகைக்கு பெறப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.