எலிக்காய்ச்சலுடன் 5000 பேர் அடையாளம்

இவ்வாண்டின் கடந்த மாதங்களில் எலிக்காய்ச்சலுடன் 5000 பேர் அடையாளம்

by Bella Dalima 21-06-2024 | 3:35 PM

Colombo (News 1st) இவ்வாண்டின் கடந்த மாதங்களில் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 5000 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை, குருநாகல் மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நோயினால் ஆண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பெண்கள் மத்தியிலும் நோய் பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் துலானி தாபரே குறிப்பிட்டார்.