Colombo (News 1st) இலங்கை இந்திய எல்லைப் பகுதியை இந்திய மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் செத் (Sanjay Seth) ஆராய்ந்துள்ளார்.
தனுஷ்கோடி - அரிச்சல் முனை கடற்கரையிலிருந்து நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய Hovercraft மூலம் இலங்கை இந்திய எல்லைப் பகுதியை இந்திய மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் செத் ஆராய்ந்துள்ளார்.
இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளும் இந்த கள விஜயத்தில் இணைந்துள்ளனர்.
தனுஷ்கோடி முதலாம் மணல் திட்டை ஆய்வு செய்த இந்திய மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் செத், இந்திய இலங்கை எல்லையிலுள்ள மூவர்ணக்கொடிக்கும் மரியாதை செலுத்தி, கடலோர காவற்படை அதிகாரிகளுடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துக்கொண்டார்.