Colombo (News 1st) தொலைத்தொடர்புகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புடன் இணங்கவில்லை என உயர் நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள விதத்தில் சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என சபாநாயகர் பாராளுமன்றுக்கு அறிவித்தார்.
அத்துடன், இந்த சட்டமூலத்தின் சில சரத்துகள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.