Colombo (News 1st) பாராளுமன்ற நுழைவாயில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரை கலைக்க பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
விரைவாக தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதேவேளை, அரச சேவை ஓய்வுபெற்ற தொழிற்சங்க கூட்டமைப்பும் இன்று பத்தரமுல்லையில் எதிர்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 7,000 ரூபா கொடுப்பனவு மற்றும் அக்ரஹார காப்புறுதி கொடுப்பனவு ஆகியவற்றை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.