Colombo (News 1st) ஸ்லோவாக்கிய பிரதமர் Robert Fico மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைநகர் Bratislava-இலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Handlova நகரில், அரசாங்க கூட்டமொன்று நடைபெற்ற கலாசார நிலையத்திற்கு முன்பாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவருக்கு 3 மணித்தியாலங்களுக்கும் மேலாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் Robert Kalinak தெரிவித்துள்ளார்.
எனினும், அவரது நிலைமை கவலைக்கிடாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என ஸ்லோவாக்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல்வாதிகள் சாடியுள்ளனர்.
துப்பாக்கிதாரி இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.