Colombo (News 1st) The Voice Kids Sri Lanka ரியாலிட்டி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று(20) இடம்பெற்றது.
இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் கண்டியின் அஸ்லம் The Voice Kids Sri Lanka மகுடத்தைச் சூடினார்.
சிரச TV-இன் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி The Voice Kids Sri Lanka கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமானது.
பிரதீப் ரங்கன, நதினி பிரேமதாச, ஹர்ஷன திசாநாயக்க, உரேஷா ரவிஹாரி ஆகிய இசைத்துறையின் பிலபல 4 பயிற்சியாளர்களின் வழிகாட்டலில் 8 திறமைசாலிகள் இறுதிப் போட்டியில் களமிறங்கினர்.
இதில் சக போட்டியாளர்களும் தமது திறமையை வௌிப்படுத்த இறுதியில் அஸ்லம் ரொஷான் வெற்றிவாகை சூடினார்.