Colombo (News 1st) 20 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை உடலுக்குள் மறைத்துக் கொண்டு வந்த வௌிநாட்டு பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியின் இஸ்தான்புல் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த போதே அவர்கள் இருவரும் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கினி மக்கள் குடியரசின் பிரஜைகள் என சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உடலில் 40 கொக்கெய்ன் வில்லைகளை அவர்கள் மறைத்துக் கொண்டு வந்ததாகவும், அவை 500 கிராம் நிறையுடையவை எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.