25 மாவட்டங்களுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த கம்மெத்த குழுவினர்

by Bella Dalima 01-12-2023 | 8:07 PM

Colombo (News 1st) 25 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஏழாம் அத்தியாயத்தின் 25 ஆம் நாள் இன்றாகும். 

கிளிநொச்சி , குருநாகல் , மொனராகலை, மாவட்டங்களுக்கு இன்று கம்மெத்த குழுவினர் சென்றிருந்தனர்.

கம்மெத்த இல்லங்கள் ​தோறும் குழுவினர் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி இல்லங்கள் தோறும் பயணத்தை ஆரம்பித்தனர். 

களுத்துறை, யாழ்ப்பாணம், திருகோணமலை, இரத்தினபுரி, பொலன்னறுவை, காலி, வவுனியா, அனுராதபுரம், மாத்தறை , மன்னார், ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு , கண்டி, மாத்தளை, அம்பாறை, பதுளை, கேகாலை, கொழும்பு, நுவரெலியா, கம்பஹா, புத்தளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, குருநாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை கம்மெத்த குழுவினர் கேட்டறிந்துகொண்டனர். 

நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் அரணாக செயற்படும் கம்மெத்த நாட்டிலுள்ள சகல மக்களினதும் தேவை அறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்கின்றது. 

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களும் இந்த திட்டத்துடன் இணைந்துள்ளனர்.  

2016 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற முதலாவது உலக மனிதாபிமான உச்சி மாநாட்டின் போது கம்மெத்தவின் அறிக்கை , ஐக்கிய நாடுகள் சபையிடம் கைளிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். 

2022 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் Watson நிறுவனம் , Arkansas பல்கலைக்கழகத்தின் Clinton  பாடசாலை ஆகியன தமது ஆராய்ச்சி பாடத்திட்டத்தில் கம்மெத்தவை முன்னணித் திட்டமாக தெரிவு செய்தன. 

 2023 ஆம் ஆண்டு தென் கொரியாவின் சோல் நகரில் நடைபெற்ற ABU - ஆசிய பசுபிக் ஔிபரப்பாளர்களின் சங்கத்தின் 60 ஆவது பொதுச்சபை கூட்டத்தின் போதும் கம்மெத்த தொடர்பில் சிறப்பு அதிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. 

கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஏழாம் கட்டம், கடந்த 7 ஆம் திகதி கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுடன் ஆரம்பமானது.

இம்முறையும் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட நாம் அது தொடர்பான அறிக்கையை பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளோம்.