தரமற்ற Human Immunoglobulin மருந்துகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளர் கைது

by Bella Dalima 01-11-2023 | 5:08 PM

Colombo (News 1st) தரமற்ற Human Immunoglobulin மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ரத்தொளுகம பகுதியை சேர்ந்த 57 வயதான நபர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Human Immunoglobulin என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மனித இரத்தத்தில் தயாரிக்கப்படும் மருந்தாகும். 

உரிய தரத்தைக் கொண்டிராத 22,500  Human Immunoglobulin மருந்துக் குப்பிகள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி  இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை அண்மையில் வௌிக்கொணரப்பட்டது.